அரவிந்த்ரெட்டி படுகொலை சம்பவத்தை கண்டித்து   மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் பாரதிய ஜனதா மருத்துவரணி மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் விதமாக மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடத்தப்படும் என்று பாரதிய ஜனதா கருத்து தெரிவித்துள்ளது .

வேலூரில் பாரதிய ஜனதா மானில நிர்வாகி டாக்டர் அரவிந்தரெட்டி கொலை செய்யப்பட்டார். அரவிந்த்ரெட்டி உடல் வேலூர் அடுக்கும் பாறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. பிறகு பா.ஜ.,க தலைவர்கள் பொன். ராதாகிருஷ்ணன். இல.கணேசன் தலைமையில் சத்துவாச்சாரி ரங்கா புரத்தில் இருக்கும் அவரது வீடுவரை ஊர்வலமாக, அவரது உடலை எடுத்துசென்றனர். அப்போது, இல.கணேசன் தெரிவித்ததாவது : தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டு குட்டிச்சுவராகி விட்டது. காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து உண்மையான குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும். அரவிந்த்ரெட்டி கொலை செய்யப்பட்டதை கண்டித்து நாளை மறு நாள் தமிழகம் மெங்கும் மாவட்ட தலை நகரங்களில் போராட்டம் நடத்தப்படும்.என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply