ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதான  ஊழல்களை திசைதிருப்பவே கட்காரி மீது புகார்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதான ஊழல்களை திசைதிருப்பவே கட்காரி மீது புகார் கூறபடுகிறது என்று பாரதிய ஜனதா மூத்த ‌தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார் .

பாரதிய ஜனதா தேசிய தலைவராக 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் கட்காரி மீது ஆதாரம் ஏதும் இன்றி ஊழல் புகார்கள் கூறபடுகின்றன . இந்நிலையில் இது குறித்து கட்சியின் மூத்த தலைவர் எல்கே. அத்வானி கூறியதாவது: ஐக்கிய முற்போக்கு_கூட்டணி அரசு தனது தவறினை மூடிமறைக்கவே கட்காரியின் மீது குற்றம் சுமத்துகிறது. தனது அதிகாரத்தை தவறாக பயன் படுத்திய தங்கள் மீதான ஊழல் புகார்களை திசைதிருப்ப முயற்சிக்கிறது என்று அத்வானி கூறினார்.

Leave a Reply