சமூகவிரோதிகளின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது ; பொன்.ராதாகிருஷ்ணன்   பா.ஜ.க மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் அரவிந்த்ரெட்டியை கொடூரமாக வெட்டி கொலை செய்தவர்களின் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

பா.ஜ.க மாநில மருத்துவ அணி செயலாளராக மிக சிறப்பாக,

சுறுசுறுப்பாக இருந்து செயல்பட்டு வந்தவர். மதுரை தாமரை சங்கமம் மாநாட்டில் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை செய்து சாதனை படைத்தவர். டாக்டர் வி.அரவிந்த் ரெட்டி தலைமையில் 300பேர் கொண்ட மருத்துவ குழு பரிசோதனை பணிகளை சிறப்பாக செய்தது . சர்க்கரை அளவு உடனடியாகதெரியும் குளக்கோ மீட்டரை கொண்டு சர்க்கரைநோய் பரிசோதனை செய்து சாதித்து காட்டியவர் அரவிந்த் ரெட்டி.

டாக்டர் அரவிந்த்ரெட்டி படு கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு பாஜக மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் தலைவருமான இல.கணேசன் உள்ளிட்டோர் விரைந்து வந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடியும்வரை இருந்து, டாக்டரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலிசெலுத்தினர்.

பின்னர் அவர்கள் டாக்டர் அரவிந்த் ரெட்டியின் உடலுடன் அங்கிருந்து ஊர்வலமாக சத்துவாச் சாரி ரங்கா புரத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கும்வந்து அஞ்சலி செலுத்தினர். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் அஞ்சலிசெலுத்திய பிறகு பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசியல் பிரமுகர்கள் சர்வ சாதாரணமாக தமிழ்நாட்டில் கொலை செய்யப்படுகிறார்கள் . சமூகவிரோதிகளின் நடமாட்டம் தமிழகத்தில் அதிகரித்துவிட்டது . கடந்த ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் சரி சட்ட ஒழுங்கு மோசமாகத்தான் உள்ளது.

எல்லோரிடமும் அன்பாகபேசி, அன்பாக நடந்துகொள்ளும் அவருக்கு நடந்துள்ள இந்த கொடூரநிகழ்வு நெஞ்சை பதறவைக்கிறது. ஈவு இரக்க மற்று நிகழ்த்தப்பட்டுள்ள இந்தகொலையில் சம்பந்தப்பட்டவர்களின் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைதுசெய்ய வேண்டும்.

இச் சம்பவத்தை கண்டித்து நாங்கள் வெள்ளிக்கிழமை தமிழகம் மெங்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம் . வேலூரில் நடைபெறும் போராட்டத்திற்கு நான் தலைமை தாங்குகிறேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்

Leave a Reply