எச்.ராஜா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் மீது தாக்குதல்  பா.ஜ.க மருத்துவ பிரிவின் மாநில செயலாளர் அரவிந்த் ரெட்டி படுகொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் அருகில், பாரதிய ஜனதாவின் ., சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில துணைத் தலைவர், எச்.ராஜா உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் முடிவடையும் தருவாயில் அங்கு திரண்டுவந்த 300-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜாவையும், கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஆயுதங்களோடும், கல்வீசியும் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலினால் மாவட்ட தலைவர் பி.எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து எச்.ராஜா கூறியதாவது: திமுக., – அதிமுக., – பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள், அடிக்கடி படு கொலை செய்யப்படுகின்றனர். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க, அரசியல்தலையீடு கூடாது என்று , கூட்டத்தில் பேசினேன்; சட்டவிரோத செயல்களுக்கு, எந்த சமுதாயத்தினரும் துணைபோகக் கூடாது என்று பேசினேன். இதற்காக, போராட்டம் முடிந்து, புறப்படும்போது, 300 பேர் கொண்ட கும்பல்வந்து, எங்கள் மீது கற்களைவீசி தாக்கியது. , பாரதிய ஜனதாவை வன்முறையால் பணிய வைக்க முடியாது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply