எச்.ராஜா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜக மருத்துவ பிரிவின் மாநில செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி படுகொலைக்கு காரணமானவர்களை கைதுசெய்யக்கோரி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போன்று சிவகங்கை மாவட்டம் இளையான் குடியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் எச்.ராஜா பேசும் போது, கொலை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், பயங்கரவாதம்

தலைதூக்க அனுமதிக்க கூடாது என பேசியுள்ளார்.

ஆர்ப்பாட்டம் முடிவடையும் நேரத்தில் அங்கு திரண்டுவந்த 300-க்கும் அதிகமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் எச்.ராஜாவையும், கட்சியின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஆயுதங்களோடும், கல்வீசியும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இத் தாக்குதலில் மாவட்ட தலைவர் பிஎம்.ராஜேந்திரன், மலையேந்திரன், ஜெய பிரகாஷ், வெள்ளத் துரை, சபேசன், நாகராஜ், சாந்தி உள்ளிட்ட பலர் பலத்தகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனநாயக_முறையில் கருத்துக்களை வெளிப்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஒருகூட்டம் ஆயுதத்தை கையில் எடுப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் ஆபத்தாக முடியும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் தீவிரவாதிகளின் மீது கடும்நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதோடு, பாஜக பொறுப்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படவேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்

Tags:

Leave a Reply