கல்யாண்சிங் மீண்டும் பாரதிய ஜனதாவில் இணைகிறார்  மீண்டும் தான் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக, உபி மாநில முன்னாள் முதல்வரும், ஜனகிராந்தி கட்சி தலைவருமான கல்யாண்சிங் அறிவித்துள்ளார்.

மேலும் தனது இந்த முடிவு குறித்து கல்யாண் சிங் கூறியதாவது ,

கூட்டணி அமைக்கும் எண்ணம் தனக்கு இல்லை. நாங்கள் சரியானநேரத்தில் கட்சியில் இணைவோம். பாரதிய ஜனதா மாநில தலைமையுடன் பேச்சுகள் நடத்தினோம். பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்காரியுடன் பேசிய பிறகு கட்சியில் இணையும் தேதி குறித்து முடிவெடுப்பேன்,

பைசாபாத், வாரணாசி மற்றும் லக்னோ குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டவர்களை விடுவிப்பதாக அறிவித்திருப்பதன் மூலமாக , உ.பி.,யில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்குவதற்கு ஆளுங்கட்சியான சமாஜ்வாடி முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தினர்.

கல்யாண் சிங் பாஜக.,வில் மீண்டும் இணைவது குறித்து ராஜ்நாத் சிங்கிடம் கேட்கப்பட்ட போது, அவரது ஆட்சிக் காலத்தில் பாராட்டும் படியான திட்டங்களை நிறைவேற்றினார். மேலும், உத்தரபிரதேச மக்களிடம் தனிப்பட்ட முறையில் அவருக்கு நிறைய செல்வாக்கு உண்டு . எனவே, அவர் மீண்டும் இணைவது கட்சிக்கு ஊக்கம் தரும் என்றார்.

Tags:

Leave a Reply