எடியூரப்பாவுக்கு எந்த பதவியை  தந்தாலும் மாநில பாஜக  எதிர்க்காது  எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவி, மாநில பாரதிய ஜனதா தலைவர் பதவி உள்ளிட்ட எந்த பதவியையும் தருவதற்க்கு தயாராக உள்ளோம்” என கர்நாடக மாநில பாரதிய ஜனதா தலைவர் ஈஸ்வரப்பாகருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது : எடியூரப்பாவுக்கு கர்நாடக மாநில முதல்வர் பதவி அல்லது கட்சியின் மாநில தலைவர் பதவி உள்ளிட்ட எந்த பதவியை கட்சிமேலிடம் தந்தாலும் மாநில பாரதிய ஜனதா,.வில் யாரும் எதிர்க்கமாட்டோம். அவர் பாரதிய ஜனதாவில்தான் உள்ளார். அவர் புதுக் கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் செய்தி வெறும் வதந்தி. அவரை சமாதானம்செய்ய முதல்வர் ஷெட்டரும், துணை முதல்வர் அசோக்கும் அவரை இரண்டு முறை சந்தித்து பேசி யுள்ளனர் என்று ஈஸ்வரப்பா கூறினார்.

Leave a Reply