வெறும் குற்றச் சாட்டுகளுக்காக கட்காரி பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை கட்காரி விவகாரம் பாரதிய ஜனதாவின் உட்கட்சி விவகாரம். மேலும் வெறும் குற்றச் சாட்டுகளுக்காக கட்காரி பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை என்று ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையாஜி ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது ; கட்காரி விவகாரம் ஆர்எஸ்எஸ்., உடையது அல்ல. அது பாரதிய ஜனதாவின் உட்கட்சி விவகாரம் . இது குறித்து பாரதிய ஜனதா தான் முடிவு செய்ய வேண்டும் . மேலும், வெறும் குற்றச் சாட்டுகளுக்காக கட்காரி பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை.

கட்காரி தன்மீதான புகார்கள் குறித்த விசாரணைக்கு தயாராகவே உள்ளார். வெறும் குற்றச் சாட்டுகளை மட்டும் அடிப்படையாக கொண்டு ஒருவரை பதவி விலகச்சொல்வதை ஏற்கமுடியாது. விசாரணை நடக்கட்டும். உண்மை வெளிவரும். சட்டம் அதன் கடமையை செய்யட்டும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply