நாட்டிலேயே முதல் முறையாக  மராட்டியத்தில் அதி விரைவு சாலையை அமைத்தவர் நிதின்கட்காரி நிதின்கட்காரி மீதான புகாரில் காட்டும்வேகத்தை , ஊழல் புகாரில் சிக்கி உள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மீதும் காட்ட வேண்டும் , நாட்டிலேயே முதல் முறையாக மராட்டியத்தில் அதி விரைவு சாலையை அமைத்தவர் நிதின்கட்காரி என்று அத்வானியின் முன்னாள் உதவியாளர் சுதீந்திர குல்கர்னி கூறினார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது; பா.ஜ.க தேசிய தலைவர் நிதின்கட்காரி தன மீது ஊழல் புகார் எழுந்ததும் அது தொடர்பான விசாரணைக்கு தயார் என அறிவித்தார் . அதே நேரம் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு. கூட்டணி அரசை சேர்ந்த தலைவர்கள் பலர்மீதும் முக்கிய குற்றச் சாட்டுகள் உள்ளன. அதற்கான ஆதாரங்களும் உள்ளன .

இந்நிலையில், நிதின் கட்காரி விஷயத்தில் வேகம்காட்டும் ஐ.மு., கூட்டணி அரசு அதேவேகத்தை புகாரில் சிக்கியுள்ள தனது தலைவர்கள் மீதும் காட்டவேண்டும். மராட்டியத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த போது, நாட்டிலேயே முதல் முறையாக அங்கு அதி விரைவு சாலையை அமைத்தவர் நிதின்கட்காரி. அதில் அவர் மீது எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply