மன்மோகன்சிங் என அழைப்பதை விட  'மான் (அமைதி) மோகன்சிங்  என அழைக்கலாம். இமாசல் பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சாரபேரணி கூட்டத்தில் கலந்துகொண்டு குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடி பேசினார்.

அப்பொது அவர் பேசியதாவது ; நாட்டில் காணப்படும் பணவீக்கபிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கும் சோனியாவும் வாய் திறந்து பேசியிருக்கிறார்களா? அதற்கான காரணங்களைத்தான் அவர்கள் சொல்லியிருக்கிறார்களா? இந்த மிகப் பெரிய பணவீக்கம் பற்றி அவர்கள் கவலை தான் தெரிவித்திருக்கிறார்களா?

நாட்டில் நிலவும் முக்கிய பிரச்சினையான லஞ்சம் , விலைஉயர்வு குறித்து பிரதமர் வாய் திறப்பதில்லை. அமைதிகாத்தும் வரும் அவரை மன்மோகன்சிங் என அழைப்பதை விட ‘மான் (அமைதி) மோகன்சிங்’ என அழைக்கலாம்.

மன்மோகன்சிங்கால் நாட்டிலுள் நிலவும் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது. ஏனென்றால் அவர் நம்பிக்கையே இல்லாமல் செயல்பட்டு கொண்டிருக்கிறார் என்று பேசினார் .

Leave a Reply