நரேந்திரமோடி மீண்டும் முதல்வராக  பதவியேற்கும் வரை உண்ணாவிரதம் குஜராத்தின் முதல்வராக, நரேந்திரமோடி மீண்டும் முதல்வராக பதவியேற்கும் வரை, உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, ராஜ்கோட் நகரைசேர்ந்த ஊதுபத்தி வியாபாரி முடிவு செய்துள்ளார்.

ராஜ்கோட் நகரில் இருக்கும் ஜேத்பூரை சேர்ந்த ஊதுபத்தி_வியாபாரி திலீப் சாவ்லா, மோடி குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றதும், உருவான மாற்றங்களால் கவரப்பட்டார். மீண்டும் குஜராத்தில் சட்ட சபை தேர்தல் வரப்போவதை முன்னிட்டு ஆகஸ்ட் 24ம் தேதி முதல், திரவஉணவு மற்றும் பழங்களை மட்டுமே உண்டு வந்தார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது ,சோம்நாத்சென்று, மோடிக்காக பிரார்த்தனைசெய்து திரும்பியதும், உண்ணா விரதம் இருக்க முடிவுசெய்துள்ளேன்; மோடி மீண்டும் முதல்வரான பின்பே உணவை உண்ணுவேன் . மோடி முதல்வர் ஆனதும், குஜராத் மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்து, குடிநீர் , மின்சார பற்றாக் குறையின்றி கிடைக்க வழிசெய்தார். ராஜ்கோட் நகரின் தீராத குடிநீர் பிரச்னையையும், மின்பற்றாக் குறையும், மோடி முதல்வரான பின் காணாமல் போனது. அதனால்தான், மோடி ஆட்சியை விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply