ராபர்ட்வதேரா  மீது விசாரணைநடத்த காங்கிரஸ் அரசு உத்தர விடுமா? என் மீதான அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்வதற்கு  நான் தயார். ராபர்ட்வதேரா தயாரா? அவர் மீது விசாரணைநடத்த காங்கிரஸ் அரசு உத்தர விடுமா? விசாரணைகளை  எதிர்கொள்வதற்கு  அவர் ஏன் தயாராக இல்லை? என் பாஜக தலைவர் நிதின் கட்கரி கேள்வியெழுப்பியுள்ளார்.

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசியதாவது : சரத்பவாருடனோ, அஜய் சன் சேத்தியுடனோ எனக்கு எந்தவித வர்த்தக தொடர்பும் இல்லை. விவசாயிகளின் நிலத்தை நான் அபகரித்து கொண்டதாக கேஜரிவால் கூறும்குற்றச்சாட்டு முற்றிலும் தவரானது.

விதர்பா பகுதியின் விவசாயிகள் நலனுக்காக நான் உழைத் துள்ளேன். விபத்துகளால் நேரிடும் இறப்புக்கெல்லாம் என் மீது களங்கம்சுமத்த சில ஊடகங்கள் முயற்சி செய்கின்றன . காங்கிரஸ் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஊடகங்கள் செயல் படுகின்றன. சி.பி.ஐ மற்றும் குற்றப் பிரிவு காவல்துறை என் மீதோ, பா.ஜ.க மீதோ குற்றம்காணவில்லை.

எனது செயல்பாடுகள் கறை படியாதவை. நான் குற்ற மற்றவன் என்பதை சட்டப் பூர்வமாக நிரூபிப்பேன். அனைத்து வழக்குகளையும் எதிர்கொள்வதற்கு நான் தயார். ராபர்ட்வதேரா தயாரா? அவர் மீது விசாரணைநடத்த காங்கிரஸ் அரசு உத்தர விடுமா? விசாரணைகளை எதிர்கொள்வதற்கு அவர் ஏன் தயாராக இல்லை? என்று வரிசையாக கேள்வி எழுப்பினர்

Leave a Reply