குஜராத் காங்கிரஷ் மேயர் மகேந்திர சிங் ராணா பாஜகவில்  இணைந்தார் குஜராத் காந்திநகர் மாநகராட்சி காங்கிரஷ் மேயர் மகேந்திர சிங் ராணா, தனது ஆதரவாளர்களுடன் பாஜக.,வில் இணைந்தார் .

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது; நான் மக்கள் பிரதிநியாக எனது

கோரிக்கைகளை ராகுல் காந்தி வரை கொண்டுசென்றேன். ஆனால் யாரும் எங்களை கண்டுக்கவில்லை. எனவே, ஒட்டு மொத்த குஜராத் வளர்ச்சியை எனது காந்தி நகர் மாநகராட்சிக்கும் பெறுவதற்காக இப்போது நான் பாஜகவில் இணைகிறேன்’ என்றார். ராணாவின் இம்முடிவை பா.ஜ.க வரவேற்றுள்ளது.

சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் வளர்ச்சி பணிகளை பாராட்டி மேயர் மகேந்திரசிங் ராணா காங்கிரஸ் கட்சி தலைமைக்கு கடிதம் எழுதினார் என்பது குறிப்பிட தக்கது.

Leave a Reply