ஊழல் குற்றச்சாட்டு புகார் நிரூபிக்கபடுமானால்   தண்டிக்கப்பட வேண்டியது அவசியம் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானோர் மீதான புகார் நிரூபிக்கபடுமானால் தொடர்புடைய நபர் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். பா.ஜ.க தலைவர் பொறுப்பில் யார் உட்காரவேண்டும்? வேண்டாம் என்பதில் நாங்கள் தலையிடமாட்டோம் என . ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னையில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய குழுக்கூட்டத்தை முன்னிட்டு செய்தியாளர்களிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இணை செயலாளர் தத்தாரேயா பேசியதாவது; ஊழல் மற்றும் முறைகேடுகளை நாங்கள் ஒரு போதும் ஆதரிக்கமாட்டோம். தனிப்பட்ட நபர்களோ அல்லது கட்சிகளோ அவர்களின் மீது குற்றம் குற்றம்சாட்டப்பட்டால் அந்த குற்றச்சாட்டுகள் பொய் என்று அவர்கள் தான் நிரூபிக்கவேண்டும்,

கெஜ்ரிவாலின் குற்றச் சாட்டுகளுக்கு காங்கிரஸ் கட்சியும், பாஜக., வும்தான் பதில் தர வேண்டும். யாராவது ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால் சட்டம் தன்கடமையை செய்வதுடன் சட்டப்படி தண்டிக்கப்படவும் வேண்டும்.

பொதுவாக ஆர்எஸ்எஸ். அமைப்பின் தேசிய குழுக்கூட்டத்தில் ஊழல் விவகாரங்கள் குறித்து விவாதிப்போம்.பா.ஜ.க தலைவர் பொறுப்பில் யார் உட்காரவேண்டும்? வேண்டாம் என்பதில் நாங்கள் தலையிடமாட்டோம் என அவர் தெரிவித்தார் .

Tags:

Leave a Reply