ஐ.மு. கூட்டணி  ஊழல்களினால் இந்தியாவின் நற்பபெயருக்கு களங்கம் மத்தியில் ஆளும் ஐ.மு. கூட்டணி அரசின் ஊழல்களினால் சர்வதேச அளவில் இந்தியாவின் நற்பபெயருக்கு களங்கம் உருவாகியுள்ளதாக அத்வானி தெரிவித்துள்ளார்.

இமாசலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடந்த பிரசார

பொதுக் கூட்டத்தில்மேலும் அவர் பேசியது:

அமெரிக்காவைபோன்று இந்தியாவிலும் முதன்மை வேட்பாளர்கள் நேருக்கு நேர் கலந்து உரையாடும் விவாதம் நடத்தப்படவேண்டும், தற்ப்பொதைய தேர்தல் நடைமுறைகளில் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம். மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். அனைவரும் வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்.

இமாசல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் இன்று (வெள்ளிக்கிழமை)யுடன் நிறைவு பெறுகிறது . அங்கு நவம்பர் 4ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

Tags:

Leave a Reply