ஆர்எஸ்எஸ். அமைப்பின் மூன்று  நாள் தேசிய செயற் குழு கூட்டம் .நாளை மாலையுடன் முடிகிறதுஆர்எஸ்எஸ். அமைப்பின் மூன்று நாள் தேசிய செயற் குழு கூட்டம் சென்னை கேளம்பாக்கம் ஸ்ரீசிவ சங்கர் பாபா ஆசிரம வளாகத்தில்  தொடங்கியது. இதை ஆர்எஸ்எஸ். அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் குத்து விளக்கேற்றி துவங்கிவைத்தார்.

சென்னையில் நடப்பது இதுவே முதல்முறையாகும். பாரதீய மஸ்தூர் சங்கம், அகில பாரத வித்யார்த்தி பரிஷத், விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட 32 சார்பு அமைப்புகளின் அமைப்பு செயலாளர்கள், தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட 402 பேர் செயற் குழுவில் பங்கேற்றுள்ளனர்.

விசுவ இந்து பரிசதின் தலைவர் அசோக்சிங்கால், பிரவீண் தொகாடியா, பாஜக அகில இந்திய அமைப்பு செயலாளர் சதீஷ், பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி போன்ற முக்கிய தலைவர்கள் பலர் செயற்குழுவில் கலந்துகொண்டனர்.  அகிலஇந்திய செயலாளர் ராம் மாதவ் பேசினார். நிலம் கையகப் படுத்துதல் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மசோதா, வட கிழக்கு மாநிலங்களில் அன்னிய_ஊடுருவல், இந்திய பாதுகாப்புக்கு சீனாவின் மூலம் உருவாகியுள்ள அச்சுறுத்தல் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த_பிரச்சினைகள் குறித்து விவாதம் நடந்தது.இன்று மாலையுடன் செயற்குழு கூட்டம் முடிகிறது.

Tags:

Leave a Reply