ஊழல் புரியும் தனிநபர்களைக் காப்பாற்ற ஆர்எஸ்எஸ். முயற்சிக்கவில்லை ஊழல் புரியும் தனிநபர்களைக் காப்பாற்ற ஆர்எஸ்எஸ். முயற்சிக்கவில்லை, தனிநபர்கள், அமைப்புகள் என்று யார் ஊழல்செய்தாலும் அது நிரூபிக்கா விட்டால் சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டும் என்பது தான் எங்கள நிலைப்பாடு. என ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுச் செயலர் சுரேஷ் ஜோஷி கருத்து தெரிவித்துள்ளார்.

நவம்பர் 2ம் தேதி சென்னை கேளம்பாக்கத்தில் இருக்கும் சிவசங்கர் பாபா ஆசிரம வளாகத்தில்தொடங்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசியசெயற்குழு கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நேற்று நிறைவுபெற்றது.

இது குறித்து சுரேஷ் ஜோஷி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது ; மூன்று நாள்கள் நடந்த செயற்குழு கூட்டத்தில் ஆர்எஸ்எஸ்.ஸின் அடுத்த ஆண்டுக்கான செயல் திட்டங்கள், நாடு எதிர் கொண்டுள்ள பல பிரச்னைகள் குறித்து விவாதிக்கபபட்டது.

தனிநபர்கள், அமைப்புகள் என்று யார் ஊழல்செய்தாலும் அது நிரூபிக்கா விட்டால் சட்டப்படி தண்டிக்கப் பட வேண்டும் என்பது தான் எங்கள நிலைப்பாடு. அதனால்தான் அண்ணா ஹசாரே, ராம்தேவ் போன்றோர் நடத்திய ஊழல் எதிர்ப்பு இயக்கங்களில் ஆர்எஸ்எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர். பாரதிய ஜனதா தலைவராக நிதின்கட்கரி இரண்டாவது முறையாக தொடர்வாரா என்பதை அந்தக் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும். தனிநபர் யாரையும் காப்பாற்ற முயற்சிசெய்யவில்லை.

1962 இந்திய – சீனப்போர் நடந்து 50 ஆண்டுகள் ஆகிறது. பல் வேறு ஊடுருவல்கள் மூலம் நமது நிலத்தை பறித்துக்கொள்ள இந்திய- திபெத் எல்லையின் 3 பகுதிகளிலும் சீனா முயன்றுவருகிறது.

இந்திய, திபெத் எல்லைகளில் விமானதளம், ஏவுகணை வீசும்தளம், படைகளை நிறுத்துதல் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை சீனா செய்துவருகிறது. எனவே, சீனாவை உள்ளடக்கிய தேசியபாதுகாப்பு கொள்கையை உருவாக்கவேண்டும் என்றார் சுரேஷ் ஜோஷி.

பேட்டியின் போது ஆர்எஸ்எஸ். அகில பாரத பிரச்சார அணிச் செயலாளர் மன்மோகன் வைத்யா, தமிழ்நாடு – கேரள மாநிலத்தலைவர் வன்னிய ராஜன், தமிழ்நாடு – கேரள மாநில அமைப்பாளர் கோ. ஸ்தாணு மாலயன், மாநில பிரச்சார அணிச்செயலாளர் நா. சடகோபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:

Leave a Reply