பாஜக மூத்த தலைவரும் குஜராத் , ராஜஸ்தான் மாநில முன்னாள் ஆளு நருமான கைலாஷ்பதி மிஷ்ரா உடல் நலமின்மை காரணமாக காலமானார். அவரது மறைவையொட்டி பீகார் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, பாஜ மாநில தலைவர்

சிபி.தாக்கூர் உள்ளிட்டோர் அவரது இல்லத்துக்க் சென்று அஞ்சலிசெலுத்தினர்.

இந்த நிலையில், மிஷ்ரா உடலுக்கு அஞ்சலி செலுத்த குஜராத் முதல்வர் நரேந்திரமோடி நேற்று பீகார் வந்தார். இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பீகார் வந்த மோடி மிஷ்ராவின் வீட்டுக்கு சென்று மிஷ்ரா உடலுக்கு அஞ்சலிசெலுத்தினார்.

நரேந்திர மோடியின் வருகைக்கு பாஜக தொண்டர்கள் பலத்த வரவேற்பளித்தனர்.அவரைப் பார்க்கதிரண்ட தொண்டர்கள் கூட்டமும் மோடி மீதான மக்களின் நம்பிக்கையை தெளிவாக காட்டியது

Tags:

Leave a Reply