விவேகானந்தரையும், தாவுத் இப்ராஹிமையும் ஒப்பிடவில்லை;  நிதின் கட்காரி பாஜக தேசியத்தலைவர் நிதின் கட்காரி, சமீபத்தில் விவேகானந்தரையும், தாவூத் இப்ராஹிமையும் ஒப்பிட்டு பேசியதாகவும் . இதற்க்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து கொண்டு காங்கிரஸ் கட்சி கசாபையும், கட்காரியையும் ஒப்பிட்டால் பாரதிய ஜனதா என்ன செய்யும் என கேளிவி எழுப்பியது .

இதற்கு பதில் தந்துள்ள கட்காரி, நான் விவேகானந்தரையும், தாவுத் இப்ராஹிமையும் ஒப்பிடவில்லை. அனைவருக்கும் ஒரேவிதமான அறிவுத்திறன்தான் உள்ளது.

நல்ல வழியில் அதனை பயன் படுத்தினால் விவேகானந்தராகலாம், தீயவழியில் பயன் படுத்தினால் தாவூத் இப்ராஹிமை போல ஆகலாம் என்று தான் கூறியுள்ளேன் என தெளிவுபடுத்தியுள்ளார்.

Tags:

Leave a Reply