ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும்  இருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார் சிவசேனா கட்சியை சேர்ந்த சஞ்சேய் ராவுத் கருத்து தெரிவித்துள்ளார்.

கார்கில் போரின்போது பாரதிய ஜனதாவின் தேசிய ஜனநாநாயக

கூட்டணி ஆட்சி செய்துகொண்டிருந்தது. அப்போது காங்கிரஷ் கட்சியும் அரசுக்கு ஆதரவு தந்தது . ஆனால், தற்போது சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் தற்ப்போதைய ஆளும் காங்கிரஸுக்கு ஆதரவு தரமறுக்கின்றன என்று ராகுல்காந்தி நேற்று உரையாற்றியிருதார்.

இது தொடர்பாக சஞ்சேய் ராவுத் கருத்து கூறுகையில் , கார்கில் போருக்கும், அன்னிய முதலீட்டுக்கும் ராகுல்காந்திக்கு வித்தியாசமே தெரியவில்லை. அரசியலில் இருப்பதற்கு அவர் தகுதியற்றவர்.

கார்கில்யுத்தம் என்பது பாகிஸ்தானால் இந்தியாவுக்கு உருவான ஆபத்து . எதிரியின் சதி செயலை முறியடிக்க அந்த நேரத்தில் இந்தியாவில் உள்ள் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து போராடவேண்டியது அவசியமாக இருந்தது. எனவே ஆதரவு வழங்கியிருந்தார்கள். இதை வைத்து பார்த்தல் ராகுல்காந்தி அரசியலில் சிறுவனாகவும் , பக்குவமடையாதவராகவும் இருக்கிறார் என்றே தோன்றுகிறது என கூறினார்

Leave a Reply