திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்.எஸ்., செயலரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி, இந்து அமைப்பினர் மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம், மகாதேவபுரம், நான்காவது வீதியை சேர்ந்தவர் ஆனந்த், 37; திருப்பூர் மாவட்ட ஆர்எஸ்எஸ்., செயலர். தனியார் நிறுவன மேலாளராக

பணியாற்றுகிறார். நேற்று மாலை 6:45 மணிக்கு, பணிமுடிந்து மேட்டுப்பாளையம், நடூர் பாலம் அருகே பைக்கில்வந்தார்.

அப்போது மர்மகும்பல் ஒன்று, இவரை வழிமறித்து, இரும்பு ராடினால் முகத்தில் சரமாரியாக தாக்கியதில், படுகாயமடைந்தார். மேட்டுப் பாளையத்தில் இருக்கும் , தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர், கோவையில் இருக்கும் , தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனந்தை தாக்கியவர்களை கைதுசெய்யக்கோரி, மேட்டுப் பாளையத்தில் இந்து அமைப்பை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் , பஸ் ஸ்டாண்ட் பங்களாமேடு, 6 ரோடு சந்திப்பில், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் பேச்சு நடத்தியதைதொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இரவு 8:45 மணிக்கு, சாலை மறியல் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் மற்றும் அருகேயுள்ள கடைகள் அடைக்கப்பட்டன. 500 காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, இந்து அமைப்பினர், கோவை – மேட்டுப்பாளையம் ரோடு, நரசிம்ம நாயக்கன்பாளையம், துடியலூர், கவுண்டம் பாளையம் பகுதிகளில், சாலைமறியலில் ஈடுபட்டனர். அசம்பாவிதம் தடுக்க, திருப்பூர் மாவட்டத்தின் முக்கியபகுதிகளில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆனந்த் மீது, தாக்குதல் நடத்தியவர்களை கைதுசெய்யக்கோரி, கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், இன்று முழுஅடைப்பு நடத்தப்படும் என்று இந்து முன்னணியின் மாநில பொதுச்செயலர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

Tags:

Leave a Reply