மேட்டுப்பாளையம் மகா தேவபுரத்தை சேர்ந்தவர் ஆனந்தன்(36). ஆர்எஸ்எஸ் மாவட்ட செயலாளர்.இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று பணியை முடித்துக்கொண்டு பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து இரும்பு கம்பியால் அடித்தும் அரிவாளால்

சரமாரியாகவெட்டி கொல்ல முயன்றனர். இதைபார்த்த பொது மக்கள் திரண்டவுடன் கும்பல் தப்பி ஓடியது . அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இதற்க்கு கடும் கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ.க மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார் : தமிழகத்தில் பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்துவருகிறது. வேலூரில் பாரதிய ஜனதா மருத்துவ அணி மாநிலசெயலாளர் அரவிந்தரெட்டி, நாகையில் மாநில செயற் குழு உறுப்பினர் புகழேந்தி, திருப்பூரில் ஆர்எஸ்எஸ் மாவட்ட செயலாளர் ஆனந்த் என வரிசையாக தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. கொலையாளிகளின் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் தொடர்தாக்குதல்கள் நடக்கின்றன. தமிழக அரசு உரியநடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டனை வழங்கவேண்டும் என்றார்

Leave a Reply