பா ஜ க மூத்த தலைவர் அத்வானி இன்று தனது_86வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார் . இந்தியாவில் பாஜக,.வின் செல்வாக்கை மக்களின் மத்தியில் வளர்த்த பெருமைக்கு சொந்தக்காரர். ரதயாத்திரைகள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து பாரதிய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த காரணமாக இருந்தவர்.

லால் கிருஷ்ணா அத்வானி என முழுபபெயரை கொண்ட அவர் சுருக்கமாக எல்கே.அத்வானி என அழைக்கப்பட்டார். இந்திய அரசியலை பொறுத்தவரை அத்வானி என்றும் மக்கள்மனதில் மறையாத அளவிற்கு பதிந்துவிட்டார் என்றால் அது மிகையல்ல.

எல்கே., அத்வானி கடந்த 1927 ம் வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி கராச்சியில் பிறந்தார். செயிண்ட் பேட்டரி உயர்நிலை பள்ளியில் படித்து ஐதராபாத்தில் இருக்கும் டிஜி., நேஷனல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார் , மும்பையில் சட்டப் படிப்பு முடித்தார். 1942 ல் ஆர்எஸ் எஸ்., சில் தன்னை இணைத்துகொண்டார். 1950 ல் பாரதிய ஜன சங்கத்தில் சேர்ந்தார். 1975 ல் இந்திரா காந்தி காலத்தில்  போடப்பட்ட எமர்ஜென்சியை எதிர்த்து ஜனதாகட்சி சார்பில் பெரும் கூட்டணியாக எதிர் கட்சிகள் இணைந்தன. இந்த காலத்தில் 1977 ல் நடந்த பொதுத் தேர்தலில் மொரார்ஜிதேசாய் பிரதமரானார். அவரது அமைச்சரவையில் அத்வானி தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

தொடர்ந்து 1986 ல் பாஜக தேசிய தலைவரானார். இவர் பாரதிய ஜனதா தலைவராக பொறுப்பேற்றது முதல் இந்தியாவில் பாரதிய ஜனதா அசுர வளர்ச்சியை அடைந்தது.1989ல் அயோத்திவிவகாரத்தை கையிலெடுத்தார். ராமர் பிறந்த புண்ணியபூமி தொடர்பாக விழிப் புணர்வு ஏற்படுத்த இந்தியா முழுவதும் ரத யாத்திரையை தொடங்கினர் . 1992 ல் ரத யாத்திரையை முடித்தார். அத்வானி காலத்தில் பாரதிய ஜனதா பல மாநிலங்களில் மக்களின் செல்வாக்கை பெற்றது. ஒரு சிறந்த பார்லிமென்டியன் , பேச்சு திறமையில் வல்லவர் என்ற பெயரெடுத்தவர், நாடாளுமன்ற கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ளாமல் விடுப்பு எடுத்துகொள்வது என்பது இவருக்கு பிடிக்காத ஒன்று.

1996 ல் நடந்த பொதுத் தேர்தலில் பாஜக , அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிபீடத்தில் அமர்ந்தது. இருப்பினும் அந்த ஆட்சி 13 நாட்களில் கலைந்து பின்னர் பலக் கட்சி கூட்டணியுடன் தேசிய ஜனநாயாக கூட்டணியமைத்து 1998 ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இது ஜெயலலிதாவின் மனக் கசப்பால் ஆட்சி இழக்கநேரிட்டது. தொடர்ந்து 1999ல் ஆட்சிக் கட்டிலில் பாஜக , வாஜ்பாய் தலைமையில் அமர்ந்தது. இந்தக் காலத்தில் அத்வானி உள் துறை அமைச்சராகவும் பிறகு துணை பிரதமராகவும் பதவிவகித்தார். தனது பதவிக் காலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிளுக்கு கிடுக்குப்பிடியை போட்டார். குண்டு வைப்பது என்பது தீவிரவாதிகளுக்கு பகல் கனவாகவே ஆனது . பாகிஸ்தானுக்கு பலமுறை எச்சரிக்கைகள் விடப்பட்டது. 1999 முதல் 2004 வரை பாஜக , தலைமயிலான அரசு முழு ஆட்சி காலத்தையும் நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply