சி பி.ராதா கிருஷ்ணன் தலைமையில்  கோவை-பேரூர் மெயின்ரோட்டில்  சாலைமறில் கோவை செல்வ புரம் செட்டி வீதியைசேர்ந்த ஆர்எஸ்எஸ். பிரமுகர் சபரிநாதன் , அவர் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்நிலையில் இதற்க்கு கண்டனம் தெரிவித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் சி பி.ராதா

கிருஷ்ணன் தலைமையில் இந்து அமைப்புகளின் சார்பில் கோவை-பேரூர் மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்ட கடைக்கு எதிரே சாலைமறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைதுசெய்ய கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

தகவல் அறிந்ததும் போலீஸ் உதவி_கமிஷனர் முத்தரசு சம்பவயிடத்துக்கு விரைந்துவந்தார். சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் சமரசபேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். கமிஷனரிடம் பேசி உரியநடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தந்தார் . அதன் பேரில் சாலை மறியல்போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:

Leave a Reply