ஆர்எஸ்எஸ் தலைவர்களை போன்று   அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும்; காங்கிரஸ் எம்.பிஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களை போன்று அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படவேண்டும் . ஆனால், காங்கிரஸ் தலைவர்களோ ஏ.சி அறைகளை விட்டு வெளியே வராமல் சொகுசுவாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் என காங்கிரஸ் எம்.பி.யே பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார் .

ம.பி மாநிலம் தீவாஸ்தொகுதி காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன்சிங் வர்மா. கடந்த இரண்டு நாளுக்கு முன்பு காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் பேசியதாவது: 2013ல் நடைபெற உள்ள ம.பி சட்டப் பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறும் என மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள் . தலைவர்கள் அனைவரும் சாதாரண தொண்டர்களாக மாறா விட்டால் காங்கிரஸ் வெற்றிபெறுவது சிரமம். டெல்லியில் இருக்கும் நம் தலைவர் களுக்கு ம.பி.,யை பற்றி எந்த ஒரு கவலையும் இல்லை.

ம.பி காட்டுப் பகுதிகளில் சுற்றுப் பயணம் செய்யவேண்டும் எனில் , காங்கிரஸ் தலைவர்கலுக்கு ஏ.சி வசதி செய்யப்பட்ட சொகுசு அறை தேவை , அவர்கள் சொகுசு அறைகளை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயல் படுகிறார்கள். பாரதிய ஜனதாவுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவு இருக்கிறது . இதனால் பாஜ தலைவர்களும் சரியாக நடக்கிறார்கள். ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கு 2013 தேர்தலில் வெற்றிபெற என்ன செய்யவேண்டும் என்பது தெரியும். இவ்வாறு சஜ்ஜன் சிங் வர்மா கூறினார்.

Tags:

Leave a Reply