ஐஏஎஸ். அதிகாரியை, அரசு மதபரச்சாரம் செய்ய நியமித்துள்ளதா என்று சந்தேகம் வலுப்பதாக மாநில பாஜக , தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .ஐஏஎஸ்.

இது குறித்து மேலும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ;

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக, அமைதியாக இருக்கும் நிலையில், ஒழுங்குநடவடிக்கை குழு ஆணையரான உமா சங்கர் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவருகிறார். பொதுவாக அவர் கோவை, நாகை, குமரி, திருப்பூர் உள்பட பல மாவட்டத்தில் மத பிரச்சாரம் செய்துவருகிறார். அரசியல் அமைப்பு சட்டவிதிமுறைப்படி அரசு அதிகாரிகள் எந்த மதத்திற்கும் சாதகமாக செயல்பட கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருமனிதன் மதத்தை கடைபடிக்க உரிமையுள்ளது. ஆனால் அதிகாரிகள் எந்த மதத்திதுகும் சலுகை காட்ட கூடாது என விதி முறை உள்ளது. ஆணைய பொறுப்பல் இருக்கும் அதிகாரி அரசியல் அமைப்பு சட்டத்தின்படி தவறானது என தெரிந்தும் அவர் இதை போன்ற செயலில் ஈடுபட்டுவருவது அரசுக்கு கெட்டபெயரை ஏற்படுத்தும் விதமாக இறுக்கிறது .அந்தந்த மதத்தைசார்ந்த அதிகாரிகள் இதை போன்ற நிலையில் ஈடுபட்டால் அரசுஎந்திரம் செயல் இழக்கும் வாய்ப்புள்ளது. அரசு அதிகாரிகள் இதை போன்று மதபிராத்தனை செய்துவருவதும், மதமாற்றம் செய்ய முயற்சிப்பதும், மதபிரச்சனை எங்கெல்லாம் உள்ளதோ அங்குசென்று மதபரச்சனையை தூண்டி விடுவதும் கண்டனத்துக்குரியது.அரசு இவரை மதபிரச்சாரம் செய்ய நியமித்துள்ளதோ என எண்ணதோன்றுகிறது.என்று கூறினார்

Leave a Reply