கல்யாண வீட்டில் மாப்பிள்ளை அழைப்புக்கு பயன் படுத்தப்படும் குதிரை மாதிரி தான் ராகுல்காந்தி என கிண்டலடித்துள்ளார் பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மாப்பிள்ளை அழைப்பின்

போது மாப்பிள்ளைய கூட்டி வருவதற்கு பயன் படுத்தப்படும் குதிரை போன்று இருக்கிறார் ராகுல்காந்தி.

எப்போதும் இந்த குதிரை ஒரே இடத்தில் தான் நிற்கும், அசையவே அசையாது. அதே போலத்தான் ராகுல்காந்தியும் எங்குமே நகருவதில்லை. அவரை நகர்த்துவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்துபார்த்தாகி விட்டது. ஆனாலும் அவர் நகரமாட்டேன் என்கிறார். சிலர் அவரை தள்ளிவிட கூட முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் முடியவில்லை.

தனக்கான நேரம்வரும் என அவர் காத்து கொண்டிருக்கிறார். அது வரை மன்மோகன்சிங் என்ன செய்ய போகிறாரோ பாவம் என சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply