ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதியில்  இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் ஜம்மு-காஷ்மீர் மாநில இந்திய எல்லை கட்டுப்பாட்டு வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவல் மீண்டும் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமையன்று நான்கு தீவிரவாதிகள் கிரன்செக்டார் வழியாக ஊடுருவமுயன்றனர். அவர்களை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில், குப்வாரா மாவட்டத்தில் இருக்கும் எல்லை கட்டுப்பாட்டு பகுதி வழியாக ஐந்து தீவிரவாதிகள் ஊடுருவமுயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும பாதுகாப்பு படையினர் அந்த பகுதிக்குச்சென்று கண்காணிப்பு பணியை தீவிரபடுத்தினர் . அப்போது திருட்டு தனமாக ஊடுருவமுயன்ற தீவிரவாதிகளுடன் அவர்கள் கடும் துப்பாக்கிசண்டையில் ஈடுபட்டனர். இதில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் . 3 ராணுவ வீரர்ககள் பலியானார்கள். தப்பி ஓடிய தீவிர வாதிகளை ராணுவம் தீவிரமாக தேடிவருகிறது.

Leave a Reply