கட்காரியின் மீது கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை;   எஸ்.குருமூர்த்தி பா.ஜ.க தலைவர், நிதின் கட்காரிக்கு, எஸ்.குருமூர்த்தி எழுதியுள்ள கடிதத்தில், கட்காரியின் மீது கூறப்படும் புகார்களில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக தலைவர் நிதின்கட்காரி மீது, சில

வாரங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மகாராஷ்டிரா மாநில பொதுப்பணிதுறை அமைச்சராக, 1990ம் ஆண்டுகளில், நிதின்கட்காரி இருந்தபோது, சில தொழில அதிபர்களுக்கு, கான்ட்ராக்ட் வழங்கி. அதற்கு பிரதி பலனாக, அவரின் புர்தி சர்க்கரை ஆலைக்கு நிதியுதவி பெற்றார் என, தெரிவித்திருந்தார்.

பிரபல ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி விசாரித்து உண்மையை வெளிகொண்டு வரும் முயற்சியில் இறங்கினர். கட்காரியின் நிறுவனத்தில் முதலீடுசெய்ததாக கூறப்படும், நாக்பூர் குழு மத்திலேயே விசாரித்தார். ஏராளமான சமூகசேவை செய்து வரும், ஜெயின் சமூகத்தைசேர்ந்த, நாக்பூர் குழும கணக்குகளை சரிபார்த்த போது, கட்காரியின் நிறுவனத்திற்கு எந்த வித நிதி உதவியும் வழங்கப்படாததை கண்டறிந்தார்.

இதை குருமூர்த்தி, தான் எழுதிவரும் பத்திரிகையில் குறிப்பிட்டார், சில ஊடகங்கள் அதை தவறாக புரிந்துகொண்டு, கட்காரியின் மீது குற்றம் இருப்பதாக செய்திகள்வெளியிட்டன. அவற்றை மறுத்து, நேட்விட்டர் இணையதளத்தில், குரூ மூர்த்தி அளித்தசெய்திகளில், கட்காரி எந்தவித முறைகேடுகளிலும் ஈடுபடவில்லை. இருப்பினும் , பாரதிய ஜனதா தலைவர் பதவியில் தொடர்வதுகுறித்து நான் எவ்வித கருத்தும் தெரிவிக்கமுடியாது என்று கூறியிருந்தார்.

அந்தகருத்தும் தவறாக பிரசாரம் செய்யப்பட்டதால், பாரதிய ஜனதா தலைவர், கட்காரிக்கே, குருமூர்த்தி நேரடியாக கடிதம் எழுதியுள்ளார். அதில், புர்தி_நிறுவன முதலீடு விசயத்தில் , எந்த வித தவறும் நடக்கவில்லை என்பதை, விசாரணையின் மூலம் கண்டறிந்தேன். இந்த விஷயத்தில் , உங்கள் மீது நான்கூறிய கருத்துகளுக்கு, வேண்டுமென்றே, அரசியல்சாயம் பூசப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply