முலாயம் சிங்கின் குடும்ப   மதகுரு ரமேஷ்திவாரி  சுட்டு கொள்ளப்பட்டர் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங்கின் குடும்ப  மதகுரு ரமேஷ்திவாரி ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள தனது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டு கொள்ளப்பட்டர் போலீஸ் உடை அணிந்துவந்த சில நபர்கள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச்சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

ரமேஷ்திவாரி வீட்டிற்கு வெளியில் அவரது தம்பி ராஜேஷ்சுடன் பேசிகொண்டிருந்திருக்கிறார் . அப்போது அங்கு போலீஸ் உடைஅணிந்து வந்த சில மர்மநபர்கள், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.

இதில் ரமேஷ்திவாரி, ராஜேஷ் ஆகியோர் பலத்தகாயம் அடைந்தனர். இதைதொடர்ந்து இருவரையும் உடனடியாக அருகில்உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே ரமேஷ்திவாரி இறந்துவிட்டார். அவரது தம்பி உயிருக்கு ஆபத்தானநிலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.

Tags:

Leave a Reply