இந்தூர்  வணிகவளாகம் முறைகேடு  திக்விஜய்சிங் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு ம.பி. மாநிலத்தில் திக்விஜய் சிங் முதல்வராக இருந்த போது அவர் இந்தூரில் குடியிருப்பு பகுதியில் விதிகளை மீறி பெரிய வணிக வளாகம்கட்ட அனுமதி தந்தார். விதிகளை மீறி, அந்த வணிக வளாகத்திற்கு திக்விஜய் சிங் அனுமதி தந்ததாக புகார்கள் எழுந்தன.

இது குறித்து கடந்த 2008-ம் ஆண்டு மகேஷ்சர்க் என்பவர் பொருளாதார குற்றப பிரிவில் வழக்குதொடர்ந்தார். ஆனால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைதொடர்ந்து மபி மாநில உயர் நீதிமன்றத்தில் மகேஷ் மனுசெய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்தூரில் வணிகவளாகம் கட்ட அனுமதித்ததில் முறை கேடுகள் நடந்துள்ளதாக கருதி. திக் விஜய் சிங்கிடம் சிபிஐ. விசாரணை நடத்தவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 6 மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல்செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply