மும்பை பந்துக்கு ஆதரவு இல்லை ; சிவசேனா சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் இறுதிச்சடங்கில் சுமார் 20 லட்சம் பேர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள் , அவரது உடல் நேற்று மும்பையில் சிவாஜிபூங்கா மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பால்தாக்கரே மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திங்கட் கிழமை ஒரு நாள் கடைகள் அடைக்கப்படும் என ஒரு வர்த்தகர்சங்கம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் மும்பை வர்த்தக சங்கங்க கூட்டமைப்பு விடுத்த பந்துக்கு ஆதரவு இல்லை என சிவசேனா நேற்று அறிவித்தது.

சிவசேனாவின் இந்த அறிவிப்புக்கு மும்பை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மும்பையில் இன்று இயல்புவாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பத் தொடங்கியுள்ளது.

Leave a Reply