சில்லரை வர்த்தகத்தில்  அன்னிய முதலீட்டுக்கு எதிராக பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டுககு அனுமதி தந்துள்ள மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளது

இந்நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பாஜக செய்திதொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது:-

அன்னிய முதலீடுகள் தொடர்பான வாக்குறுதிகளை மத்திய அரசு மீறிவிட்டது. சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக பாராளு மன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்படும். இந்த தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஆதரிக்கவேண்டும். பாராளுமன்றத்தில் அன்னிய முதலீடு குறித்து விவாதம் நடத்தப்படவேண்டும்.

மேலும் அரசுக்கேதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி அனைத்துக்கட்சி தலைவர்களுடனும் கலந்து ஆலோசிக்கப்படும். அப்படி தீர்மானம் வரும்பட்சத்தில் அதனை ஆதரிப்பதா? வேண்டாமா? என்பது குறித்து பிறகு முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply