ஈவ் டீசிங்கில் ஈடுபட்டால்   டிரைவிங்லைசென்ஸ், பாஸ் போர்ட்  வழங்கப்படமாட்டாது மத்திய பிரதேசத்தில் ஈவ் டீசிங் பிரச்னை பெரும் பிரச்சனையாக உள்ளது, அதை தடுக்க சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், குவாலியரில் நடந்த ஒருநிகழ்ச்சியில் பேசிய முதல்வர்

சிவராஜ்சிங் சவுகான், ஈவ் டீசிங்கில் யாரும் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு டிரைவிங்லைசென்ஸ், பாஸ் போர்ட் , நன்னடத்தை சான்றிதழ் போன்றவை வழங்கப்படமாட்டாது. மீண்டும் அவர்கள் அதே போன்ற குற்றங்களை செய்வது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஈவ் டீசிங் தொடர்பான புகார்களைதெரிவிக்க இலவச தொலை பேசி எண்ணும் விரைவில் பயன் பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

Leave a Reply