இந்தியாவை சிறப்பாக வழி நடத்தவும், இந்தியாவுக்கு பொருத்தமானவரும் நரேந்திர மோடிதான் இந்தியாவை சிறப்பாக வழி நடத்தவும், இந்தியாவுக்கு பொருத்தமானவரும் நரேந்திர மோடிதான் என்றும் நாட்டை வழி நடத்திச்செல்ல பொருத்தமான கட்சி பாஜக,.தான் என்றும் சி.என்.என்-ஐ.பி.என் மற்றும் இந்துஸ்தான் டைம்ஸ் உள்ளிட்டவை சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

கருத்து கணிப்பில் கலந்துகொண்டவர்களில் பலரும் இந்தியாவின் தற்போதைய மோசமான பொருளாதார நிலை குறித்து கவலையும் , நம்பிக்கையின்மையையும் , அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளியிட்டுள்ளனர்.

நகர்ப்புற இந்தியர்களில் 60 சதவீத பேர் தங்கள வேலையும், வருமானமும் பாதுகாப்பானதாக இல்லை என்றும் 55 சதவீதம் பேர் பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து சரிசெய்ய அரசுத் தரப்பில் போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

நகர்ப்புற இந்தியர்களின் மத்தியில் நரேந்திரமோடிக்கு நல்ல ஆதரவு உள்ளதை இந்த கருத்து கணிப்பு தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது . இந்தியாவின் பிரதமர் பதவிக்கு மோடியே பொருத்தமானவர் அவர்தான் நாட்டை வழி நடத்திச்செல்ல சரியான தலைவர் என்று பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். எதிர் கால நம்பிக்கை நச்சத்திரம் என காங்கிரஸ் கட்சியினர் மட்டும் போற்றும் ராகுல் காந்திக்கு நான்காவது இடமே கிடைத்துள்ளது நிதீஷ் குமார் 5வது இடத்தை பிடித்துள்ளார் .

மேலும் நாட்டை வழி நடத்திச்செல்ல எந்த கட்சி பொருத்தமானது என்ற கேள்விக்கு பெரும்பாலோரின் ஆதரவு பாஜகவுக்குக் கிடைத்துள்ளது என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply