அஜ்மல்கசாப்க்கு  மக்களின்  முன்னிலையில் தண்டனையை  நிறைவேற்றிருக்க வேண்டும் மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல்கசாப் தூக்கிலிடப்பட்டான். இந்நிலையில் கசாப்பை மக்கள் முன்னிலையில் தூக்கில் போட்டிருக்கலாம் என்று சமூக சேவகர் அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்

இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது , கசாபுக்கு நீண்ட காலத்திற்கு பிறகு தண்டனை நிறைவேற்றப்பட்டிருக்கிறது . மக்களின் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றிருக்க வேண்டும். பொதுமக்கள் முன்னிலையில் தண்டனையை நிறைவேற்றினால் ,நம் நாட்டில் அப்பாவி மக்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்துபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருந்திருக்கும் என்று கூறினார்.

Leave a Reply