பெற்ற சுதந்திரத்தை காங்கிரஸ் அரசு, மீண்டும் ஆங்கிலேயருக்கு தாரை வார்க்கப் பார்க்கிறது சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்தால், மீண்டும் இந்தியா ஆங்கிலேயருக்கு அடிமையாகும் என்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார்.

விலைவாசி உயர்வு , சில்லரை வணிகத்தில் அன்னிய முதலிட்டுக்கு அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு

எதிராக தமிழக பாஜக சார்பில் மெமோரியல்ஹால் அருகே நேற்று கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பொன் .ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

இந்திய வியாபாரிகளை நசுக்கி, அன்னிய நாட்டு வியாபாரிகளை வளர்த்து விடும் வகையில், காங்கிரஸ் அரசு சில்லரைவணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதித்து ள்ளது. இது மிகவும் கண்டிக்கத் தக்கது. பலநூறு ஆண்டுகளாக ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டுகிடந்த இந்தியா, பலகட்ட போராட்டத்துக்கு பிறகு சுதந்திரம்பெற்றது. தற்போது பெற்றசுதந்திரத்தை காங்கிரஸ் அரசு, மீண்டும் ஆங்கிலேயருக்கு தாரை வார்க்கப் பார்க்கிறது.

அதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. இந்த விஷயத்தில் அன்னியரை ஒழிக்க, வியாபாரிகள் ஒட்டு மொத்தமாக பாஜக விற்கு ஆதரவுதெரிவித்து, தாமரை கொடியை ஏந்திப்பிடிக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்

Leave a Reply