டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொலை செய்தவர்கள் கைது கடந்தமாதம் 23ந்தேதி பாஜக மாநில மருத்து வரணி செயலாளர் டாக்டர் அரவிந்த் ரெட்டி வேலூர் கொசப் பேட்டையில் இருக்கும் அவரது கிளினிக்கில் இருந்து வெளியே வரும் போது ரவுடிகளால் கொடூரமாகவெட்டி கொலைசெய்யப்பட்டார்.

இந்தகொலையை கண்டித்து பாஜக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தின. இந்நிலையில் சிறையில் இரும் ராஜா என்ற ரவுடி சிறையிலிருந்தபடியே திட்டம் தீட்டி இந்தகொலையை செய்துள்ளான்.

சிறையிலிருந்தபடியே செல்போனின் மூலமாக திட்டம் வகுத்து தந்து வெளியே உள்ள தனது ஆட்களின் மூலம் இந்தகொலையை செய்துள்ளான்.

டாக்டர் அரவிந்த் ரெட்டியை கொன்றவர்கள் மூன்றுபேர், இவர்களுக்கு உதவியது மூன்றுபேர் என்று மொத்தம் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தற்போது சிக்கியிருக்கும் 6 பேரில் 5பேர் வேலூரை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது . இவர்களை ஏவிய ராஜா என்ற ரவுடி சிறையில் இருக்கிறன் . அவனை கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்தப்பின்பே எதற்காக கொலைசெய்ய சொன்னான் என முழு விவரமும் தெரியவரும் .

Leave a Reply