சிபிஐ.  இயக்குனராக ரஞ்சித்சின்ஹா நியமிக்க பட்டதற்கு  பாஜக கடும் எதிர்ப்பு சிபிஐ.,யின் புதிய இயக்குனராக மூத்த ஐபிஎஸ்., அதிகாரி ரஞ்சித்சின்ஹா,.வை நியமித்ததற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

தற்போதைய சிபிஐ இயக்குனராக இருக்கும் ஏபி.சிங் நவம்பர் 30ம்

தேதியுடன் ஓய்வுபெற உள்ளதை தொடர்ந்து மத்திய கண்காணிப்பு ஆணையர் தலைமையிலான தேர்வுக்குழு, 3 அதிகாரிகளின் பெயர்களை இந்த பதவிக்கு பரிந்துரைத்திருந்தது. இதில் இருந்து, ரஞ்சித் சின்ஹாவை பிரதமர் தலைமையிலான நியமனக்குழு சி.பி.ஐ இயக்குனராக நியமித்திருக்கிறது .

ஆனால் இந்த நியமனத்தை திரும்பப்பெற வேண்டும் என பா.ஜ.க, வலியுறுத்தியுள்ளது. இது குறித்து பா.ஜ.க,.வின் மக்களவை தலைவர் சுஷ்மாஸ்வராஜ், மாநிலங்களவைத் தலைவர் அருண் ஜேட்லி உள்ளிட்டோர் பிரதமருக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில், இத்தகைய நியமனங்களை பிரதமர், மக்களவை எதிர்க் கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் அடங்கிய குழு தான் நியமிக்க வேண்டும் என லோக்பால் மசோதா மீதான ராஜ்ய சபா நிலைக் குழு பரிந்துரைத்திருப்பதை சுட்டிக்காட்டி இத்தகைய நியமனங்களை அத்தகையகுழு மூலமே நியமிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply