ராமர் கோயிலை  கட்ட பாராளுமன்றத்தில் மசோதா ;  மோகன் பகவத்  அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயிலை கட்டுவதற்கு மத்திய அரசு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்செய்து நிறைவேற்ற வேண்டும். எட்று ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார் :-

கான்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் மேலும் அவர் பேசியதாவது; அயோத்தியில் பிரமாண்டமான ராமர்கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்செய்து நிறைவேற்ற வேண்டும். ராமர் கோவில் கட்டுவதற்காக செயல்படும் உயர் அதிகாரம்கொண்ட துறவிகள் குழுவின் இயக்கத்துக்கு ஆர்எஸ்எஸ். ஆதரவு தரும்.

ராம ஜென்ம பூமி நியாஸ் அமைப்பைசேர்ந்த துறவிகள், வரும் கும்பமேளா விழாவின்போது அயோத்தியில் ராமர் கோயில் கட்டவேண்டும் என் மத்திய அரசை வலியுறுத்தும் இயக்கத்தை நடத்த முடிவுசெய்துள்ளனர். இந்த இயக்கத்துக்கு ஆர்எஸ்எஸ். ஆதரவு தரும் . இதை மிகப்பெரிய இயக்கமாக உருவாக்க ஆர்எஸ்எஸ்.தொண்டர்கள் தீவிரமாக உழைப்பார்கள் என்று அவர் பேசினார்.

Leave a Reply