குஜராத்  தேர்தல்  பாஜக தலைவர்கள் சூறாவளி சுற்றுப் பயணம் குஜராத் சட்ட சபை தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. 87 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் அடுத்தமாதம் 13ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலமெங்கும் பாஜக. தேசிய தலைவர்களை

வைத்து 87 இடங்களில் பிரமாண்டதேர்தல் பிரசார பேரணிகளை நடத்துவதற்கு பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் 87 தொகுதிகளில் பாஜக. தலைவர் நிதின்கட்காரி, அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு, ராஜ்நாத்சிங், ஜார்கண்ட் முதல்வர் மந்திரி அர்ஜுன் முண்டா, சத்தீஸ்கர் முதல்வர் மந்திரி ராமன் சிங், மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஞ்சிங் சவுகான் உள்ளிட்டோர் வரும் 25, 26 தேதிகளில் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து மோடிக்கு ஆதரவு திரட்டுகின்றனர்.

Leave a Reply