ஊழலுக்கு எதிராக காங்கிரஸ்கட்சி என்ன நடவடிக்கைகளை  எடுத்துள்ளது? நிர்மலா சீதாராமன்   மத்திய கணக்கு தணிக்கைதுறை (சி.ஏ.ஜி.) மற்றும் பொதுகணக்கு குழுவை மத்திய மந்திரிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதர்க்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் தெரிவித்ததாவது:-

அரசியலமைப்பின் நிர்வாகத்துறைகளை தொடர்ந்து தரக் குறைவாக விமர்சித்துவரும் காங்கிரசை பாஜக கண்டிக்கிறது. மத்திய கேபினட்மந்திரிகள்கூட இந்த நிர்வாகங்களை சீர்குலைக்கும் விதமாக கேள்வி எழுப்பி வருவது அதிர்ச்சியூட்டும் விதமாக உள்ளது.

சி.ஏ.ஜி.யின் மீது கண்டனம் தெரிவித்துள்ள சோனியாகாந்தி, ஊழலுக்கு எதிராக காங்கிரஸ்கட்சி என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கூறவேண்டும்.

அரசு நிறுவனங்கள் மீது காங்கிரஸ் மந்திரிகள் குறை கூறி வருகிற போது, அவை எப்படிசெயல்பட வேண்டும் என சோனியா நினைக்கிறார்?. நிலக்கரி சுரங்க ஊழல், காமன் வெல்த் ஊழல் , ராபர்ட் வதேரா மீதான ஊழல் குற்றச்சாட்டு போன்ற பிரச்சினைகள் பற்றி சோனியா பேசுவதைகேட்க பாஜக விரும்புகிறது. இது குறித்து அமைதியாக இருப்பதைவிட்டு சோனியா வாய் திறந்து பேசவே நாங்கள் விரும்புகிறோம் என அவர் தெரிவித்தார்

Leave a Reply