நம்பிக்கையில்லாத் தீர்மானம்  சரியான நேரத்தில் பாஜக முடிவுசெய்யும் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது குறித்து சரியான நேரத்தில் பாஜக முடிவுசெய்யும் மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்
இது குறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது; நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வருவதில்

திறந்தமனதுடன் இருக்கிறோம். இதுதொடர்பாக மற்ற கட்சியினருடன் ஆலோசனைநடத்தி நிலையை ஆராய உள்ளோம். தகுந்தநேரத்தில் உரிய நடவடிக்கையை எடுப்போம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அனைத்துத்துறைகளிலும் தோல்வியடைந்து விட்டது. இந்த கூட்டணி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர்; ஆட்சியிலிருந்து அகற்றவிரும்புகின்றனர்.

சி.பி.ஐ இயக்குநர் நியமனம்தொடர்பாக தேர்வுக்குழு சார்பில் மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல்செய்யவிருந்த நிலையில், அதற்குமுன்னதாக அவசர அவசரமாக சி.பி.ஐ இயக்குநர் ரஞ்சித்சின்ஹாவை நியமித்துள்ளனர். அவர் தலையாட்டி பொம்மையை போல் செயல்படக் கூடியவர். அரசியல் சாசன அமைப்பு களை அரசியல் ஆதாயத்துககாக காங்கிரஸ் பயன் படுத்துகிறது. எப்போ தெல்லாம் அந்த கட்சி பிரச்னையில் சிக்குகிறதோ, அப்போதெல்லாம் அரசியல்சாசன அமைப்புகளின் முக்கியத்துவத்தை குறைப்பதற்குத் தயங்குவதில்லை என்றார்

Leave a Reply