பாகிஸ்தானும் அதன் அமெரிக்க உறவும்  பாகிஸ்தான் என்கிறதேசம் உருவான நாளிலிருந்து அமெரிக்க-பாகிஸ்தான் நட்புறவு இன்று இருக்கும் அளவுக்கு என்றைக்குமே சிதில மடைந்த நிலையை அடைந்த தில்லை என சொல்லி விடலாம். அமெரிக்கவெறுப்பு என்பது என்றைக்குமே பாகிஸ்தானிய மதவாத அரசியலி ன் அடிநாதமாக_எப்போதுமே இருந்திருக்கிறது.

உதாரணத்துக்கு 1979-இல் வஹாபிய அடிப்படை வாதிகளால் மெக்காமசூதி கைப்பற்றப்பட்ட போது, அந்த நிகழ்வில் எந்ததொடர்பும் இல்லாத அமெரிக்கர்களையே பாகிஸ்தானிய மத வாதிகள் முதல் குற்றவாளியாக பார்த்தார்கள். அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் பாகிஸ்தானில் இருக்கும் அமெரிக்க தூதரக பாதுகாப்பு வீரர் கொல்லப்பட்டார். அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டு எரிக்க பட்டது .

சோவியத் யூனியனுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இணைந்து நிழல் யுத்தம் நடத்தியது , சோவியத் யூனியனுக்கு எதிராக போராடியவர்களுக்கு பாகிஸ்தான் வழியாக பெருமளவு நிதியும் , இராணுவ தளவாடங்களும் அமெரிக்கவால் அனுப்பப்பட்டது . இதில் ராணுவத் தளவாடங்களில் மூன்றில் ஒரு பகுதி காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு மடை மாற்றப்பட்டது. மேலும் ஒரு பகுதி ஆயதங்கள் சர்வதேச ஆயுத கறுப்புச்சந்தையில்பாகிஸ்தான் ராணுவத்தல் கொள்ளை லாபத்துக்கு பாகிஸ்தான் ராணுவத்தல் விறக்கப்பட்டது . இவ்வாறு வெளி மார்க்கெட்டில் விற்க்கப்பட்ட துப்பாக்கிகள் வேறு சிலஇடங்களில் கைப்பற்றப்பட்ட போது அவற்றில் அமெரிக்க ராணுவ தளவாடங்களின் சீரியல் எண்கள் இருப்பது கண்டறியப்பட்டது ,

இதை தொடர்து விழித்துக்கொண்ட அமெரிக்கா தான் அனுப்பிய ஆயுதங்களின் கிடங்கை சோதனை இடுவதற்கு ஒருகுழுவை அனுப்பியது. ஆனால் அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த பாகிஸ்தான் ராணுவம் சும்மா இருக்குமா ஆயுத கிடங்கு இருந்தால் தானே பார்வை இடுவிங்க அதை கொளுத்திட்டா ?. ஆம் அந்த கிடங்கு "தீ விபத்தில்" வெடித்துச் சிதறியது. அதில் கராச்சியின் நூற்று கணக்கான அப்பாவிகள் பலியானார்கள் .

இருப்பினும் தனக்கு ஒரு கண் போனால் என்ன எதிரிக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என நினைக்கும் அமெரிக்க ஆப்கானிஸ்தானில் சோவியத்ரஷ்யாவை தோற்கடிக்கும் எண்ணத்தில் , பாகிஸ்தானிற்கான அமெரிக்க நிதி உதவியையும் ஆயுத உதவியையும் நிறுத்தவில்லை.

1989-இல் சோவியத் ரஷ்யா உடைந்தபின் மிச்சம் மீதம் இருந்த ஆயுதங்களும் பயங்கரவாதிகளும் காஷ்மீருக்கு திருப்பி விடப்பட்டனர். காஷ்மீர்தெருக்களில் அப்பாவி இந்துக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் மண்ணை விட்டு டெல்லியில் அகதிகளாக தஞ்சம்புகுந்தனர். தன்நாட்டு பிரஜைகளை தன் நாட்டு எல்லைக்குள்ளேயே காக்கமுடியாமல் அகதிகளாக்கிய பலவீன அரசாக இந்தியா ஆனது.

1984-இலேயே அணு குண்டு சோதனையை பாகிஸ்தான் சீனாவில்வைத்து நடத்திய போது, ரீகன் அரசு அதைக் கண்டும் காணாமல்விட்டது. ஏனென்றால், இந்தசெய்தி உண்மையென்றானால், பாகிஸ்தானிற்கான அத்தனை நிதி மற்றும் ஆயுதஉதவியையும் அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டிவரும். சோவியத்துக்கு எதிரான நிழல்யுத்தத்தில் உதவிக் கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு எதிராக அன்றைய அமெரிக்க அரசு எந்த வித நிலைப் பாட்டையும் எடுக்கத் தயாராக இல்லை. இன்றோ அதே சீனா உதவியுடன் 250 க்கும் அதிகமான அணு ஆயுதங்களை பாகிஸ்தான் தன வசம் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் இவை பயங்கரவாதிகள் கையில் சிக்கி விடலாம் என மிரட்டி, பயங்கரவாதிகளை கட்டுக்குள்வைக்க தொடர்ந்த பண உதவிதேவை என அமெரிக்காவை நெருக்கிக் கொண்டிருக்கிறது.

2001 இரட்டைக் கோபுர தகர்ப்பிற்குப் பின் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுக்க, அதிலும் பாகிஸ்தான் ராணுவம் பணம் சுருட்டத் தொடங்கியது. பாகிஸ்தானிய ராணுவத்துக்கு வருடத்திற்கு ரூ,1500 கோடி அளவுக்கு அமெரிக்கா ஆயுத தளவாடங்களை வாங்க நிதியுதவிதருகிறது. இது தவிர பயங்கரவாதத்திற்கு எதிரானபோரில் உதவி என்கிற பெயரில் வருடத்திற்கு ரூ.5000 கோடி என்கிற கணக்கில் இது வரை ரூ.20000 கோடி அளவுக்கு பாகிஸ்தானுக்கு தாரை வார்த்துள்ளது.

பாகிஸ்தானை பொறுத்தவரை தீவிரவாதம் என்பது பொன் முட்டையிடும் வாத்து. அதற்கு நன்றாக  தீனிபோட்டு வளர்த்தால் அது அமெரிக்க டாலர்களாக கொட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பதை ஆப்கன்போரின் வழியாக பாக் ராணுவமும், உளவுத் துறையும், அரசும் தெளிவாக அறிந்து வைத்துள்ளன.

அமெரிக்காவுக்கு பாகிஸ்தானின் இந்தவேஷம் கடந்த சில வருடங்களாகவே பெரும்பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. பாகிஸ்தான் ஜிஹாதிகளின் அமெரிக்கவெறுப்பு என்பது ஆப்கன் நேட்டோபடைகள் மற்றும் அமெரிக்கர்களை நோக்கிய தாக்குதலாகபெருமளவு வளர்ந்துவிட்டது.

அமெரிக்க அதிபர் பராக்ஒபாமா பதவிக்கு வரும்முன்பே, "தேவைப்பட்டால் தீவிரவாதிகளை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்துகூட அமெரிக்கா அழிக்கும்" என குறிப்பிட்டிருந்தார். பராக் ஒபாமா பதவிக்கு வந்ததில் இருந்து பாகிஸ்னுக்குள் ராணுவ ஹெலிகாப்டர் தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டன.

இந்நிலையில் 2008 ம ஆண்டு பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உதவியுடன் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் மும்பையில் பயங்கரவாத வெறி ஆட்டத்தை நிகழ்த்தினர். இதற்கான அனைத்து ஆதாரங்களையும் இந்தியா அமெரிக்க அரசுடன் பகிர்ந்துகொண்டது. மும்பை தீவிரவாதத்தை திட்டமிட்டதில் ஒருவனான டேவிட் ஹெட்லீ லஷ்கர் இ தொய்பா தொடர்பை பகிரங்கபடுத்தினான் . லஷ்கர் இ தொய்பா அமைப்புக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் பலமட்டங்களில் இருக்கும் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த நிகழ்ச்சிகள் பாகிஸ்தானுக்கும், ஜிஹாதி பயங்கரவாதத்துக்கும் இருக்கும் தொடர்பை தெளிவாக உலக நாடுகளுக்கு வெளிச்சம்போட்டு காட்டியது .

தீவிரவாதத்தை ஒழிக்கவோ, ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவரவோ பாகிஸ்தானை நம்ப முடியாது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்துவிட்டிருந்தது. இதன் ஒரு முக்கிய நிகழ்வாக, பாகிஸ்தான் . ராணுவப் பயிற்சி முகாம் இருக்கும் அபோடாபாத் எனும் நகரத்தில் ஒரு ஆடம்பர பங்களாவுக்குள் 2011 மே-மாத இரவில் அமெரிக்க ராணுவ சீல்கள் பிரிவு ரகசியதாக்குதல் நடத்தி ஒஸாமா பின் லாடனை கொன்றது. அமெரிக்காவிடம இருந்து தொடர்ந்து பணம்கறக்கும் பொருட்டு, பின்லாடனை பாகிஸ்தான் ராணுவமும், அதன் உளவுஅமைப்புமே பாதுகாத்து வைத்திருந்ததாக நம்ப தகுந்த செய்திகள் வெளி வந்தன. பாகிஸ்தான் தரப்பின்மேல் அமெரிக்க அதிகா வட்டம் முழுமையாகவே நம்பிக்கை இழந்து விட்டிருப்பதை இந்த நிகழ்ச்சி தெளிவாக காட்டியது.

தீவிரஜிஹாதி வாத ஜிஹாதிகளின் சதவீதம் என எடுத்துக் கொண்டால் பாகிஸ்தானில் தான் இன்று உலகளவிலேயே அதிகமாக தீவிரவாதிகள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவமே 4 தீவிரவாத அமைப்புகளுக்கு விதையாக, அரணாக, உரமாகச்செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சி தருவதிலிருந்து, தொலைதொடர்பு, உளவு, நிதியுதவி என எல்லா விதத்திலும் உதவுகிறது. இந்த நான்கு அமைப்புகளை குறித்து அமெரிக்க தூதரக_அதிகாரி பேட்டர்ஸன் அனுபிய ரகசியகேபிள் விக்கிலீக்ஸ் இணையதளத்தால் வெளியிடப்பட்டது. அந்த அமைப்புகள் வருமாறு: ஆப்கன் தாலிபான், ஹக்கானிகுழு, ஹெக்மட்டியார்குழு, லஷ்கர்-இ-தெய்பா (அ) ஜமாத்-உத்தவா.

இதில் குறிப்பாக லஷ்கர் இ தொய்பா அமைப்பு உலகளாவிய மிகப் பெரும் வலைப் பின்னலாக தனது தீவிரவாத அமைப்பின் வீச்சை விரிவாக்கி உள்ளது. உலகின் பலநாடுகளிலும் இருக்கும் இஸ்லாமிய தொண்டமைப்புகளின் மூலமாக லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி குவிகிறது. 2008-ஆம் ஆண்டு மட்டும் சுமார் ரூ 5000 கோடி அளவுக்கு லஷ்கர் அமைப்புக்கு நிதி குவிந்ததாக அமெரிக்கா கணக்கிட்டுள்ளது.

இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் என பல நாடுகளிள இருந்தும் பயங்கரவாதத்திற்கு ஆள்சேர்க்க லஷ்கர் அமைப்பால் முடிகிறது. ஆயுதப் பயிற்சி பெற்ற 50,000 ஜிஹாதிகளைத் தன்கையில் வைத்திருக்கும் லஷ்கர் அமைப்பை பாக்ராணுவம் ஒரு ரிஸர்வ் ராணுவம்போல, தனது நிழல் யுத்தத்திற்கு வசதியாக பயன் படுத்திக்கொள்கிறது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புவைத்து அதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை அதனால் தொடுக்கமுடிகிறது. லஷ்கர் இ தொய்பாவுக்கு பாகிஸ்தான் ராணுவம், மற்றும் ஒரு சில அரேபிய நாடுகளின் ஆதரவும் இருக்கிறது.

பாகிஸ்தானின் அணு ஆயுத திருட்டுபுகழ் ஏ.க்யு. கான் லஷ்கர் இ தொய்பாவின் சார்பில் வருடம் வருடம் நடைபெறும் மாநாடுகளுக்கு தவறாமல்செல்பவர். மாலத்  தீவுகளில் வஹாபிய ஆட்சி நிறுவபபட்டு ஜனநாயகம் ஒடுக்க பட்டதில் சவுதி அரேபியா கணிசமான பங்கை வகிக்கிறது. மாலத் தீவில் இஸ்லாத்தைத் தவிர பிற மதங்களை பிரசாரிப்பது குற்றம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கரின் முக்கிய தீவுக்கேந்திரமாகவும், இந்தியாவின் மீது நிகழ்த்தப்படப் போகும் எதிர்காலத் தாக்குதல்களின் மையமாகவும் மாலத் தீவு வருங் காலத்தில் உருவெடுக்கும் என்ற அபாயம் தெளிவாகத் தெரிகிறது.

லஷ்கர் அமைப்பு, பாகிஸ்தானின் எல்லைக்குள் இதுவரைக்கும் எந்த தீவிரவாத செயலையும் நடத்தவில்லை என்பது கவனிக்கவேண்டிய ஒன்று. அல்கொய்தாவின் வீழ்ச்சிக்குப் பிறகு உலகளாவிய பெரும்பயங்கரவாத அமைப்பாக லஷ்கர் இ தொய்பா உருவெடுத்திருக்கிறது. மிகத் தெளிவாக எல்லை தாண்டிய பயங்கரவாதசெயல்களை மட்டுமே புரியும் ஒருஅமைப்புக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும், உளவுத் துறையும் உதவிசெய்து ஆதவு தந்து வளர்த்து வருகிறது. அதாவது, பயங்கரவாத அரசு என சொல்வதற்க்கான அனைத்து குணாம்சங்களையும் கொண்ட நாடாக பாகிஸ்தான் இன்று உருவெடுத்துள்ளது.

சவுதி அரசால் 2 வருடம் ரியாத் நகரில் வஹாபி மதவாதப் பயிற்சிதரப்பட்டு 1985-இல் பாகிஸ்தானுக்கு திரும்பிய ஹஃபீஸ் முஹமது சயீத்தால் தொடங்க பட்ட அமைப்புகள்தான் ஜமாத்-உத்-தவாவும் லஷ்கர் இ டொய்பாவும்., சேவைப்பணி எனும் பெயரில் ஜமாத்-உத்-தவா செயல்பட்டாலும் உண்மையில் அது லஷ்கர் இ தொய்பாவின் பினாமி_அமைப்பே. 2001 பாராளுமன்ற தாக்குதல், 2008 மும்பை பயங்கரவாதம், 2010 காஷ்மீர் விமானநிலையத்தாக்குதல் என்று பல தாக்குதல்களை இந்தியாமீது நிகழ்த்திய அமைப்பு இது.

இண்டர்போல் நிறுவனம் 2009-ம் ஆண்டு ஹஃபீஸ் மீது சர்வதேச அரெஸ்ட்வாரெண்ட் பிறப்பித்தது, அதைத் தொடர்ந்து பாகிஸ்தானில் காவலில்வைக்கப்பட்ட ஹஃபீஸ் 2011 அக்டோபரில் பாகிஸ்தானின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப் பட்டவுடன் ஆப்கானிஸ்தானில் இருக்கும் நேட்டோ படைக்கு தளவாடங்கள் கொண்டுசெல்லும் லாரிகளை தாக்கச் சொல்லி அறைகூவல் விடுத்தார், இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த அமெரிக்கா துள்ளி யெழுந்து ஹபீஸின் கைதுக்கு உதவு பவர்க்கு 10மில்லியன் டாலர் என அவர் தலைக்கு விலை நிர்ணயித்தது. அமெரிக்க அறிவிப்பு வந்த வுடன், பாகிஸ்தானில் பத்திரிகையாளரைக் கூட்டி ஹஃபீஸ், "நானொன்றும் குகையில்மறைந்து வாழவில்லை, வெளியில் சுதந்திர மாகத்தானே இருக்கிறேன். அந்த 10 மில்லியனை எனக்கே தர வேண்டும்" எஎன்னை முடிந்தால் பிடித்துக் கொள்ளுங்கள் என சவால்விடும் விதமாகப் பேசினார். ஹெக்மட்டியார், ஹக்கானி, லஷ்கர் உள்ளிட்ட அமைப்புகள எல்லாம் அமெரிக்காவால் சோவியத்துக்கு எதிராக ஜிஹாத்போருக்காக தீனிபோட்டு வளர்க்கப்பட்ட பயங்கரவாதக் குழுக்களே. இன்று அவை அனைத்தும் அமெரிக்காவுக்கு எதிராகவே திரும்பி விட்டது

நேட்டோ தளவாடங்களின் மீதானதாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடனேயே நடத்தப் படுகிறது. 2008-இல் 160 நேட்டொ தளவாடலாரிகள் கொளுத்தப்பட்டன. 2009-இல் மட்டும் 25 முறை நேட்டோ தளவாடலாரிகள் தாக்கப்பட்டுள்ளன. 2011-இல் இவ்எண்ணிக்கை 111-ஆக உயர்ந்துள்ளது. ஆப்கானிஸ்தான் போருக்கு தளவாடங்கள் கொண்டுசெல்லும் பல வாகனங்கள் காணாமல் போய்விடுகின்றன. இவ்வாறு காணாமல்போன தளவாடங்கள் சில பெஷாவர் அருகில் இருக்கும் கர்கோனோ எனும் இடத்தின் தெருமார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருப்பது கண்டு டரியப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் நடத்தும் மறைமுகயுத்தத்தில் அமெரிக்காவின் ஆயுதத்தையும் நிதியையும் ஒருபுறம் பெற்றுக் கொண்டே அமெரிக்கத்தரப்பும் நேட்டோபடைகளும் பாகிஸ்தானால் காட்டிக் கொடுக்கப்படுகின்றன. பயங்கரவாதம் என்பதை ஒருபணம் கறக்கும் கலையாக செம்மை படுத்தி விட்டிருக்கிறது பாகிஸ்தான். முக்கிய ஆதரவாக அதற்கு இருப்பது சவுதிஅரேபியா. சவுதிக்கு பாகிஸ்தான் ஜனநாயக பாதையில் திரும்புவது பிடிக்கவில்லை- பாகிஸ்தானின் ஜனநாயகம் ஷியாக்களுக்கு அரசியலில் இடம் பெற்று தந்துவிடும் என அஞ்சுகிறது. பாகிஷ்தான் பிரதமர் சர்தாரி ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால் அவரைவெறுக்கிறது. சுன்னி தரப்பிலிருந்து நவாஸ்ஷெரீஃப் பிரதமராவதையும் ராணுவத்தின் கையில் பாகிஷ்தான் இருப்பதையுமே சவுதி விரும்புகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் விக்கிலீக்ஸ் அம்பலப் படுத்திய கேபிள்களிள இருந்து தெரிய வருகிறது . பாகிஸ்தான் சமீப காலமாக சீனாவுடன் நெருங்கி வருகிறது. சீனா பாகிஸ்தானின் நீண் கால கட்டுமானப்பணிகளில் பெருமளவு முதலீடு செய்துவருகிறது. சீனாவுடனான இந்த நெருக்கத்தை அமெரிக்காவும் சவுதியும் விரும்பாது என்பதே பாகிஸ்தான் சீனாவுடன்_நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் மிரட்டல் அரசியலின் துருப்புசீட்டாகவும் ஆகிறது.

வேறுவகையில் சொல்லப் போனால், நல்ல அரசாக இருப்பதற்க்காக அல்ல, பயங்கரவாத அரசாக இல்லாமலிருக்க தொடர்ந்து பில்லியன்கணக்கில் டாலர்களைக் கொட்டு என மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாகவே பாகிஸ்தான் மாறிவிட்டது. உண்மையில் இது அமெரிக்கவின் ஆதிக்க வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பலசக்திகளைத் திரட்டி அமெரிக்காவை தடுமாற்றத் திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றிபெற்று வருகிறதென்றால் அதற்கு காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடி வாங்கியிருக்கும் அமெரிக்க பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களினால் அயர்ச்சி அடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான். இருப்பினும் பாகிஸ்தான் தனது நலன்களுக்கு எதிராக போவதாக எண்ணும் ஒருகட்டத்தில் பாகிஸ்தானையே பலநாடுகளாகப் பிரித்து விடவும் கூட அமெரிக்காவும் மேற்குநாடுகளும் முனையும். இதற்கு பலஉதாரணங்கள் சமீப காலவரலாற்றில் உள்ளன. பாகிஸ்தான் விஷயத்தில் அது எளிதில் நடந்தேற கூடியதுதான்.

இவற்றை ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் ஒன்று தெளிவாக தெரிகிறது . இந்தியா ஆப்கானிஸ்தானில் தனது இருப்பை பலப்படுத்தி கொள்ள வேண்டும். மிகப் பெரிய அளவில் பில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்தியா ஆப்கானிஸ்தானின் வளர்ச்சிப் பணிகளுக்கு உதவிவருகிறது. ஆப்கானிஸ் தானமோ பாகிஷ்தான் அரசை கடும்எதிரியாகவே பார்க்கிறது. இதனை இந்தியா உபயோகப்படுத்தி கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானிலிருந்து இன்னும் இரண்டு வருடங்களில் பெரும்பாலான நேட்டோ படைகளும் அமெரிக்கப்படைகளும் திரும்பிச்சென்று விடும். அந்த நிலையில் இப்போது பாக் தரப்பு கொள்ளையடித்து வைத்துள்ள ஆயுதங்களுடன், பயிற்சி தந்து வைத்துள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராகத்திருப்பி விடப்படுவார்கள். அந்த நிலையில் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை ஒடிக்கும் விதத்தில் இந்தியா மிகக்கடுமையாக பதிலடி கொடுக்க வேண்டும். அந்த வாய்ப்பைப்பயன்படுத்தி பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அங்குதான் பெரும்பாலான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் உள்ளன என்பது இதற்கு மிகச்சாதகமான காரணமாகவும் ஆகும்.
மதவாதத்தை அறவே ஒதுக்கி தேசியமாக தன்னை மறுவார்ப்பு செய்யாத வரை பாகிஸ்தான் உருப்படப் போவதில்லை. அவ்வாறு மறு வார்ப்பு செய்யாத வரை பாகிஸ்தானுடனான எந்த வித இணக்க அணுகு முறையும் விழலுக்கு இழைத்த நீர் தான் என்பதை இந்தியா உணரவேண்டும்.

அமெரிக்க பாகிஸ்தான் உறவுகள் சீர்கெட்டிருந் தாலும் பாகிஸ்தான் தலைவர்கள் பலருக்கு அமெரிக்கா ,பிரிட்டனுடன் நெருக்கம்அதிகம். பாகிஸ்தான் அரசியல்வாதிகள், ராணுவத் தலைவர்கள் பலரது வாழ் நாள் முதலீடுகள் மேற்குநாடுகளின் வங்கிகளில் தான் உள்ளது. சவுதி அரசும் அமெரிக்காவும் நெருங்கிய நட்புநாடுகள் என்பதால் சவுதியைவைத்து பாகிஸ்தானை அடக்க அமெரிக்கா நினைக்கலாம். ஆனால் பாகிஸ்தான் சீனாவுடனான உறவு இந்த சமன்பாட்டைக் குலைத்து விடக்கூடும். மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி இலங்கை சீனாவின் உதவியோடு ஒரு இனஅழிப்பை நடத்தி முடிந்திருக்கிறது. இது பாகிஸ்தானால் கவனிக்கப் படாமல் போகாது. மேற்கின் வீழ்ச்சியும், சீனாவின் எழுச்சியும் ஆசியாவில் சிலபுதிய அரசியல் சமன் பாடுகளை உருவாக்கவல்லது.

இந்தப் பின்னணியில் தான் ஆசியாவின் முக்கிய பிராந்தியசக்தியாக இந்தியா உருவெடுத்து வருவதை நாம் பார்க்கவேண்டும். 'இந்தியா பல வீனமான நாடு, அதன் தலைவர்கள் போருக்குதயாரில்லை' என ஒருபிம்பம் நம் நாட்டை குறித்து பிறநாடுகளுக்கு உருவாகுமானால் அது நம்நாட்டை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பலவீன மாக்கும் சக்திகளுக்குத் தான் உதவும். தேசியத்தைப் பொறுத்த வரை ஒற்றுமை தான் வலிமை. மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு வளர்வது, தேசியத்திற்கு எதிரான சக்திகளையே வலுப் படுத்தும். தேசத்தின் ஒட்டு மொத்த வலிமை தான் மக்களுக்கு எதிர் காலத்தின் மீது நம்பிக்கையை வளர்க்கிறது. வலிமை தான் வாழ்க்கை.

Leave a Reply