பாஜக.,விலிருந்து  தற்காலிக நீக்கம் கட்கரியை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஏற்க்கனவே கட்சி கட்டுப்பாட்டை மீறிய ராம் ஜெத்மலானி மேலும், தற்போது சி.பி.ஐ இயக்குனராக ரஞ்சித்சின்கா நியமிக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து, பிரதமருக்கு கடிதமும் எழுதியது. இதற்கு எதிராகவும் அவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து , கட்சி கட்டுபாட்டை மீறியதாக ஜெத்மலானியின் மீது பாரதிய ஜனதா மேலிடம் நேற்றிரவு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது . இதன் படி, கட்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார். அவரது செயல்பாடுகள் காங்கிரசுக்கு சாதகமாகவே அமையும் என பாரதிய ஜனதா தகவல் தொடர்பாளர் ஷாநாவஸ் உசேன் கருத்து தெரிவித்துள்ளார் .

Leave a Reply