இலங்கை அகதிகளின்   படத்தைப் போட்டு பிரசாரம்செய்த காங்கிரஸின் மோசடி வேலை அம்பலம் குஜராத் மாநில சட்ட சபை தேர்தலில் மோடி அரசை வெற்றிகொள்ள இலங்கை அகதிகளின் படத்தைப் போட்டு பிரசாரம்செய்த காங்கிரஸின் மோசடித்தனம் இப்போது அம்பலமாகியுள்ளது.

குஜராத் தேர்தலில் எப்படியாவது நரேந்திர மோடியை வீழ்த்திவிட

வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சி எப்படியெல்லாம் மோடி மீது குற்றம் சுமத்தலாம் என மிக கடுமையாக முயற்சித்து கொண்டிருக்கிறது.

அதன்படி குஜராத் மாநில குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து இல்லை என்றும் , இதனால் அந்த குழந்தைகள் அவமதிப்படுகிறார்கள் என்றும் குற்றம் சுமத்தியது. மேலும் இந்த விவகாரத்துக்கு மோடி அரசு தீர்வுகாணவில்லை என்று ஒருபடத்தை போட்டு பிரசாரத்தில் ஈடுபட்டது.

ஆனால் இந்த படத்தின்_பூர்வீகத்தை கண்டுபிடித்துவிட்ட மோடி அரசு அதை வெளியிட்டுள்ளது.

அதாவது, ஐநா சபையின் அமைப்பான யுனிசெப்-ன் புகைப் படக்காரர் எடுத்த இலங்கை அகதி முகாமைச்சேர்ந்த தாயும் சேயும் இருக்கும் படம் தான் இது என நிருபித்து காங்கிரஷின் முகத்தில் கரியை பூசியுள்ளது .

Leave a Reply