விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இதில்  சமரசத்துக்கே இடமில்லை;  சுஷ்மா சுவராஜ் மத்திய அமைச்சர் கமல்நாத்தின் தலைமையில் புது டெல்லியில் நடந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில், ஒருமித்த கருத்து எட்டவில்லை.

பாரதிய ஜனதா சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட சுஷ்மா சுவராஜ், சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு

பற்றிய விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளார். அதில் சமரசத்துக்கே இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

திரிணமூல் காங்கிரசின் சார்பில், நேரடி அன்னிய முதலீடுகுறித்து விவாதம் நடத்தப்படுவது மட்டுமே அவசியம் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் வாக்கெடுப்பில் பாரதிய ஜனதா உறுதியாக இருப்பதாலும் , காங்கிரஸ் பிடிவாதம் பிடிப்பதாலும் , அனைத்துக் கட்சிக்கூட்டம் ஒருமித்த கருத்து எட்டபபடாமல் முடிவடைந்தது.

Leave a Reply