கர்நாடகம் திறந்த மனதுடன் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும்  கர்நாடகம் திறந்த மனதுடன் , காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைத்தர முன் வரவேண்டும் என தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது , கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு செல்லும் தமிழக முதல்வருக்கு எங்கள் ஆதரவையும், இந்தபயணம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

காவிரி நதிநீரை எதிர்நோக்கி வாடிய முகத்துடன் இருக்கும் தமிழக விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற காவிரி நதி நீரை தாராள மனதுடன் தமிழகத்துக்குதர கர்நாடகம் முன் வரவேண்டும் என கேட்டுக்கொண்டார் .

Leave a Reply