பால் தாக்கரே அபூர்வமான, தனித் தன்மையான, உண்மையான தலைவர் அனைத்து கட்சிகளின் சார்பில் மறைந்த சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேக்கு அஞ்சலி லுத்தும் நிகழ்ச்சி, மும்பையில் நடைபெற்றது.

இந்நிகழச்சியில் கலந்து கொண்டு பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது:-
இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் நடந்த 1952-ம் ஆண்டிலிருந்து , நான் அரசியலில் இருந்துவருகின்றேன். ஆனால், பால் தாக்கரேவை போன்ற மற்றொருவரை நான் பார்த்ததில்லை. அவர் அபூர்வமான, தனித் தன்மையான, உண்மையான தலைவர். அவர் எப்போதும் அரசாங்கத்தில் அங்கம் வகித்தது கிடையாது. இருப்பினும் அரசாங்கத்தில் அவரதுதாக்கம் இருந்தது. நிறைய தலைவர்களை நான் பார்த்துள்ளேன் . ஆனால் அவரைப் போன்ற ஒரு தலைவரை இதுவரை நான் பார்த்தது இல்லை. என்று அவர் கூறினார்.

Leave a Reply