அன்னியநேரடி முதலீட்டுக்கு  தி.மு.க,.வின்  ஆதரவு அதன் இரட்டை நிலைபபாட்டையே காட்டுகிறது அன்னியநேரடி முதலீட்டுக்கு தி.மு.க ஆதரவு தெரிவித்திருப்பது, அதன் இரட்டை நிலைபபாட்டையே காட்டுகிறது என தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அன்னிய முதலீடு பற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு சஸ்பென்ஸ்வைத்த தி.மு.க தலைவர் கருணாநிதியை, அப்போதே அவர் இரட்டைவேடம் போடுகிறார் என்று அரசியல்நோக்கர்கள் கூறினர்.

மத்திய அரசு தற்போது கவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக அன்னியநேரடி முதலீட்டு வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் அவரது இரட்டை நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளார். மேலும், தற்போது மக்களவைக்கு தேர்தல்நடந்தால், பாரதிய ஜனதா தான் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும், தேர்தலின் மீதான பயத்தையே காட்டுகிறது.

1999ஆம் ஆண்டில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணிவைத்து தேர்தலில் போட்டியிட்ட தி.மு.க, அன்று ஏறிய ஏணியை இன்று எட்டிஉதைக்க நினைப்பது அவருடையதகுதிக்கு சற்றும் உகந்ததல்ல என்று கருதுகிறோம்.

அன்னிய நேரடி_முதலீட்டுக்கு முதலில் ஆதரவு தர மறுத்ததற்கும், பிறகு ஆதரவு தந்ததற்கும் உண்மையான காரணத்தை திரைமறைவை அகற்றி தமிழக மக்களுக்கு தெரிவிக்கவேண்டும் என கேட்டுக் கொள்வதாகக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply